பாடசாலை மாணவர்களின் கை, கால்களை மறைப்பதற்கு புதிய ஆடை – கல்வி அமைச்சு அவதானம்!

Monday, June 19th, 2023

பாடசாலையில் கல்வி கற்கும்போது நுளம்பு கடியில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக அனைத்து மாணவர்களுக்கும் கை மற்றும் கால்களை மறைக்கும் வகையில் ஆடைகளை அணிவது பொருத்தமானது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல்மாகாண உபகுழுவினால் இந்த ஆலோசனை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலை மாணவர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலை மாணவர்களின் கை, கால்களை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவதன் மூலம் நுளம்புக்கடியை தடுக்க முடியும் என டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல்மாகாண உபகுழு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: