சிறப்பு அமைச்சரின் அதிகாரத்திற்கு முதலமைச்சர்கள் எதிர்ப்பு!

Tuesday, December 20th, 2016

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அதிகாரத்தினை வழங்கும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரம் குறைக்கப்படும் என பெரும்பாலான முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மூலம் வலைய அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தனியான சபை ஒன்று உருவாக்கப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தெற்கு, வடமேல்,மத்திய,கிழக்கு மற்றும் வடக்கு அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்படும்.

தெற்கு அபிவிருத்தி சபையில் காலி, மாத்தறை ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.

புத்தளம், குருணாகல், கேகாலை, ஆகிய மாவட்டங்கள் வடமேல்மாகாண சபைக்கு உரித்தாகுவதுடன், மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் மத்திய அபிவிருத்தி சபைக்கு உள்வாங்கப்படுகின்றன.

அநுராதபுரம்,பொலன்னறுவை,திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் கிழக்கு அபிவிருத்தி சபைக்குள் உள்வாங்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் வடக்கு அபிவிருத்தி சபையில் அடங்குகின்றன.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மூலத்திற்கேற்ப ஸ்தாபிக்கப்படும் அபிவிருத்தி முகவர்களின் தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப மூன்றுவருடங்களுக்கு இந்த சபைகள் செயற்படவுள்ளன.

co

Related posts: