சித்தன்கேணியில் பட்டப் பகலில் யுவதி கடத்தல்: சந்தேகநபருக்குப் பிணை!

சித்தன்கேணிப் பகுதியில் நேற்று முன்தினம் வீடு புகுந்து யுவதியொருவரைக் கடத்தினார் என்ற சந்தேகத்தில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மல்லாகம் நீதிமன்றம் சந்தேகநபருக்குப் பிணை வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடத்தப்பட்ட யுவதியின் வீட்டிற்குச் செல்லும் வீதியில் கைத் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்ததாக அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியமைக்கு அமைவாகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த யுவதியை மீட்பதற்கும், கடத்தல் காரர்களைக் கைது செய்வதற்குமான நடவடிக்கைகளில் வட்டுக் கோட்டைப் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
Related posts:
நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
தொடர்ந்தும் முடக்க நிலையை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் – ஜனாதிபத...
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனா...
|
|