சிகிரியா சுவர் ஓவியங்களின் நிலை தொடர்பில் ஆராய விசேட குழு!

Sunday, July 31st, 2016

உலகபுகழ் பெற்ற சிகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக. தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு அவற்றிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் இந்த குழுவினரால் ஆராயப்படவுள்ளது. இதனை அடுத்து ஓவியங்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள் தொடர்பில் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தொல்பொருளியல் திணைக்களம் கூறியுள்ளது.

Related posts:


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச...
சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நிறுத்துங்கள் - தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!
இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறி...