சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

Wednesday, September 20th, 2017

2016 ஆம் ஆண்டு கா.பொத. சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், உத்தியோகத்தர்களும் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்புச் சபை சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின்  ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்,  இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தலைவர் கீர்த்தி சுரஞ்சித் மாவல்லகே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற 40 மாணவர்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவும், பரிசில்களும் சான்றிதழ்களும், யாழ்.மாவட்ட ரீதியாக 32 அரச உத்தியோகத்தர்கள் சிறப்பான பங்களிப்பினைச் செலுத்தியமைக்காகவும் கௌரவிக்கப்பட்டனர்

Related posts: