சாதாரணதரப் பெறுபெறு சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!

Thursday, April 4th, 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள், முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் சனத்.பி.பூஜித குறிப்பிட்டுள்ளார். சான்றிதழ் ஒன்றுக்கு 600 ரூபா கட்டணம் அறவிடப்படும்.

இதேவேளை, கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான பரிசீலனை விண்ணப்பங்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பாடசாலைப்பரீட்சாத்திகள் தமது பாடசாலை அதிபர்களின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செயது அனுப்பி வைத்தல் வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத்தடவை நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இப்பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளில் 71.66 வீதமானோர் உயர்தரம் கற்கத்தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: