கட்டாக்காலி நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை

Thursday, January 26th, 2017

யாழ்.மாவட்டத்தில் கட்டாக் காலிகளாக அலையும் நாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்ளுராட்சி சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளை நகரசபை மேற்கொண்டுள்ளது.

சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நகரசபை செயலாளர் கா.சண்முகதாசன் அறிவுறுத்தியுள்ளார். நாய்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக விவரங்கள் வட்டார ரீதியாக சபை அலுவலர்களால் மேற்கொள்ளப்படவுள்ளன. பதிவுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள், திகதிகள் ஒலி பெருக்கி மூலம் வரியிறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்படும். வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்து எதிர்காலத்தில் ஏற்படும் சிரமங்ளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு சுகதார அமைச்சும், உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து கட்டர்காலி நாய்களைப் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

kkk

Related posts: