சாதாரணதரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!
Saturday, February 25th, 2017
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத்திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாணவர்களின் விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்திசெய்து பாடசாலை அதிபர்கள் அவற்றை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவது அவசியமாகும். பிரதேசசெயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தின் அலுவலகங்களிலும் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய...
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
|
|
|


