சலுகை விலையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனை!

ஈரானுக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தை செலுத்துவதற்கான வழிமுறையைத் தயாரித்த பின்னர், அந்த நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் ஈரானில் இடம்பெற்றதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார். ஈரானிடமிருந்து சலுகை விலையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதுதவிர கடந்த காலங்களில் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்ட எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இந்த தொகையை செலுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டியபின்னர், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
|
|