சர்வதேச நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை பெறுவதற்காக அதிக நிதி செலவீடு!

Saturday, October 8th, 2016

இலங்கையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பல திட்டங்களுக்கு சர்வதேச ஆலோசனை நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளன. இதற்காக பாரிய நிதி செலவிடப்படுகின்றதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

உத்தேச நிதி நகரத்திற்கான புதிய சட்டமூலத்தை தயாரித்தல் மற்றும் தற்போதைய சட்டத்தை திருத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி மற்றும் வணிக வரி சட்டம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சர்வதேச சட்ட நிறுவனமான பேக்கர் மற்றும் மெக்கன்ஸி நிறுவனத்தின் சேவை கோரப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இந்தோனேஷிய வரி சட்டம் மற்றும் வேறு வரி சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதாகவும் இந்த செயற்பாடுகள் பேக்கர் மற்றும் மெக்கன்ஸி நிறுவனத்தின் ஹொங்கொங் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பிரதமர் அலுவலகம் வௌயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்றிறன் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஊடக செயற்பாடுகளை முகாமைத்துவப்படுத்தும் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக இலங்கை சர்வதேச ஆலோசனையைப் பெறவுள்ளது.

இதற்காக பிரபல சர்வதேச முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான மெக்கன்ஸி நிறுவனத்தின் மலேஷிய கிளையுடன் அரசாங்கம் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.

அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவின் சன்ற்லர், ட்ரவிசன் மற்றும் ரோசன்பேர்க் என்ற நிறுவனத்துடன் 18 மாத கால உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்தல், பொருளாதார மற்றும் வணிக உறவுகள் தொடர்பான புதிய சந்தர்ப்பங்களை தேடுதல், நாட்டின் பொருட்களுக்காக அமெரிக்காவில் புதிய சந்தையொன்றை தேடுதல் மற்றும் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் சன்ற்லர், ட்ரவிசன் மற்றும் ரோசன்பேர்க் என்ற நிறுவனம் வழங்கும் சேவைக்காக ஒன்றரை வருட காலத்திற்கு 6,30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்தவேண்டியுள்ளது.இதேவேளை, மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து நகர வீடமைப்புத்திட்ட நிறுவனமொன்றிடம் ஆலோசனை பெறுவதற்கு முன்வந்துள்ளது.

eco

Related posts: