சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை பெறுவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – பிரித்தானியாவும் அறிவிப்பு!
Thursday, January 26th, 2023
இலங்கை, உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை பரிசீலிக்கத் தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பெரிஸ் கிளப்பின் அங்கத்தவர் என்ற வகையில் இந்த ஆதரவை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
பெரிஸ் கிளப் மற்றும் பெரிஸ் கிளப் அல்லாத கடன் வழங்குநர்களுக்கு இடையிலான முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு தளத்துக்கு பிரித்தானியா முழு ஆதரவளிக்கிறது.
இது இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும் என்று தாம் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் ஆன்-மெரி ட்ரெவெல்யன், (Anne-Marie Trevelyan ) அந்த நாட்டின் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்!
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இர...
|
|
|


