சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை!
Monday, June 19th, 2017
சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லாட்சியில் பல ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், 163 உலக நாடுகள் மத்தியில் இலங்கை 80 ஆவது இடத்தை அடைந்துள்ளது. கடந்த வருடத்தோடு ஒப்பிடப்படுமிடத்து இலங்கை 17 நிலைகளால் முன்னேற்றம் கண்டுள்ளது.
உலக சமாதான சுட்டெண் தரப்படுத்தில் ஐஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் இந்த சர்வதேச சமாதானம் தொடர்பான சுட்டெண் தரப்படுத்தல் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
ஊழியரின் தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதம்!
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு ஆபத்து - பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறுவர் வைத்தி...
|
|
|


