சமநிலையான அபிவிருத்தியை எற்படுத்துவதே இலக்கு – அமைச்சர் கபீர் ஹாசிம்!
Thursday, August 17th, 2017
கடந்த காலம் பூராகவும் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக கிராமங்களுக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்கு சமநிலையான அபிவிருத்தி என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் NSB i Saver சேவையை விரிவாக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைரமையில் இன்று காலை கொழும்பிலுள்ள தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் எப்போதும் கிராமங்களின் பொருளாதாரம் குறித்து ஆர்வம் செலுத்துவதாகவும், 2015ம் ஆண்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு ஒரே அளவான தொழில்நுட்பத்தை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
தீபமேற்றுவது அச்சுறுத்தல் இல்லை - சரத் பொன்சேக!
தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - தினேஷ் குணவர்தன!
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபி...
|
|
|


