சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கைது!

வெள்ள முந்தலம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பயணித்த இரு படகு, மீன்பிடிக்கப் பயன்படுத்திய 2 சட்டவிரோத வலைகள் மற்றும் 10 கிலோகிராம் மீன்கள் ஆகியவற்றை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக புத்தளம் மீன்பிடித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
Related posts:
பலாலி விமானத்தளத்திற்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு!
மணல் விலையில் மாற்றம் – மாற்று திட்டம் தயார்!
வடக்கில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!
|
|