சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவருக்கு அபராதம்!

Tuesday, November 22nd, 2016

அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற இரண்டு இளைஞர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் 1லட்சத்து 15ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் மணலையும் பரிமுதல் செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களும் அவற்றின் சாரதிகளான 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளையில் அவர்களில் ஒருவர் ஏற்கனவே சட்ட விரோதமாக மணலைக் கொண்டு சென்ற குற்றச்செயலுக்காக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டமை தொயவந்தது. அதனையடுத்து அவருக்கு 65ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற இளைஞருக்கு 50ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மணலை அரசுடைமையாக்குமாறும் உழவு இயந்திரத்தை தடுத்து வைக்குமாறும் பதில் நீதிவான் கே.கேசவன் உத்தரவிட்டார்.

asd1

Related posts: