சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்கப்படும்

Wednesday, April 27th, 2016

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இதுவரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆயுதங்களை மீள ஒப்படைக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கும் நபர்களுக்கு 5,000 ரூபா தொடக்கம் 25,000 ரூபா பணத்தொகை வழங்கப்படுகின்றது.

சட்டவிரோத கைத்துப்பாகிகளை பொலிஸ் நிலையங்களிலும் பிரதேச செயலாளர் அலுவலகம் அல்லது மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஹொரணை , போருவதன்ட பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஆடை தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கிகளை வைத்திருப்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொ்ர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: