சட்டமா திணைக்களத்தில் வெற்றிடங்கள்!

சட்டமா திணைக்களத்தில் மனித வளங்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப்பிரிவில் 85 பேரும், சிவில் பிரிவில் 90 வழக்கறிஞர்களுமே சேவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த துறைகளில் தற்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகாரிகள் சேவையில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய வழக்கறிஞர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் உடனடியாக சேவையில் இணைக்கப்படாமல் அவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதற்கு சிறிது காலம் எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்போது சட்டமா திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படுமாயின் நிலுவையில் உள்ள பல வழக்குகளின் காலதாமதத்தை தவிர்த்துக்கொள்ளலாம் எனவும் சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
மத்திய வங்கி விவகாரம்- உறுப்பினர்களுக்கு இடையில் விரிசல்!
தேயிலையின் விலை அதிகரிப்பு!
வாக்குமூலத்துக்காக காரணம் குறித்து அழைக்கப்படும் நபர் கேள்வி எழுப்பினால் காரணத்தை அறிவிக்க வேண்டும...
|
|