சங்கிலியன் பூங்காவில் மகளிர் தின நிகழ்வு!
Friday, March 11th, 2016
மகளிர் தினத்தை முன்னிட்டு சமத்துவத்தை பேணுவோம் என்ற சர்வதேச தொனிப்பொருளுக்கு அமையவும், தற்கால நடைமுறைக்கு அமையவும் பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதனூடாக சம உரிமையை பேணுவோம் என்ற தொனியில் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ் செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணிக்கு முத்திரைச்சந்தி சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் கௌரவிப்பு விழாவும், பெண் தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும், சமூக பிரச்சினைகள் தொடர்பான ஆக்க நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும் யாழ் இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் அ. நடராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாதனைப் பெண்களுக்கான கௌரவத்தையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் யாழ் பல்கலைக் கழக மனித வள முகாமைத்துவ திணைக்கள தலைவி தேவரஞ்சினி சிவாஸ்கரன், யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் யாழ் சமூக செயற்பாட்டு மைய தலைவியுமான பவானி ஞானச்சந்திரமூர்த்தி ஆகியோருடன், மாணவர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், பெண்கள் செயற்பாட்டு மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|
|


