க.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர். அவரை நீதிமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) முற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
'பகிரப்பட்ட செழுமை' இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுங்கள் - இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அ...
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
|
|