2100 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை – பாதியாக குறையும் – தி லான்செட் பத்திரிகை அதிர்ச்சி தகவல்!

Tuesday, August 25th, 2020

2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்தரிப்பு விகிதங்கள் குறித்து தி லான்செட் பத்திரிகை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளிவந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் கருத்தரிப்பு வீதங்கள், இறப்பு விகிதம், இடம்பெயர்வு மற்றும் சாத்தியமான மக்கள் தொகை மாற்றம் ஆகியவற்றை இந்த அறிக்கை கண்கில் எடுத்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையின் மக்கள் தொகை 2100 க்குள் 10.45 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில் 21.60 மில்லியனாக இருந்த இலங்கையின் மக்கள் தொகை 2031 க்குள் அதன் அதிகபட்ச மக்கள் தொகையை எட்டும், இது 22.34 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் இலங்கையில் கருவுறுதல் விகிதம், ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1.80 ஆகும். இருப்பினும், அடுத்த 80 ஆண்டுகளில் இது 1.46 ஆக குறையும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

சுகாதார பரிந்துரைகளின்படி, ஒரு நாட்டின் சராசரி கருவுறுதல் வீதம் 2.1 க்கும் குறைவாக இருந்தால், அந்த நாட்டின் மக்கள் தொகை குறையும். இலங்கையில் கருவுறுதல் விகிதம் 1963 இல் 5.0 ஆகவும், 2016 வாக்கில் இது 2.2 ஆகவும் குறைந்தது.

இந்த நிலைக்கு பங்களிக்கும் பல காரணிகள் உள்ளன. குழந்தைகளின் பிறப்பு குறைவதற்கு பொருளாதார நிலை, சுகாதார நிலை, பெற்றோரின் தொழில் பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணிகள் பங்களிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதது

Related posts: