கோழிக் கழிவுகளைப் பொது இடங்களில் போடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – யாழ்.மாநகர சபை !

யாழ் மாநகரப் பகுதியில் கோழி இறைச்சிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண மாநர சபை அறிவித்துள்ளது.
கோழி இறைச்சி விற்பனையும் செய்யும் சிலரே அதன் கழிவுகளை பொது இடங்களில் பொலித்தீன் பைகளில் போட்டு விட்டுச் செல்கின்றனர். கோழி இறைச்சிக் கழிவுகளால் யாழ்ப்பாண மாநகரின் பொது இடங்களில் துர்நாற்றம் வீசுகின்றது. சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. அனேகமான கோழி இறைச்சிக் கடைகளில் உள்ள கழிவுகள் யாவும் மாநகர கழிவகற்றும் பிரிவினரால் கட்டணம் அறவிட்டே அகற்றப்பட்டு வருகின்றன.
கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் அவற்றின் கழிவுகளைப் பொது இடங்களில் வீசி வருகின்றனர். கல்லுண்டாய் முதன்மைச் சாலையிலும் இந்தக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றக் கொட்டுவதை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும். மாநகர சபை கட்டணம் செலுத்தி கழிவகற்றும் பிரிவினரிடம் தமது விவரங்களையும் பதிவு செய்து இந்தக் கழிவுகளை அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று மாநாகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|