கோர விபத்து: இருவர் படுகாயம்!

உந்துருளி வாய்காலினுள் பாய்ந்து கோர விபத்தக்கள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அதிஸ்டவசமாக தப்பியுள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில் நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .குறித்த வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் - மாவட்ட அரசாங்க அதிபர்!
திருக்கார்த்திகை திருநாள் !
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
|
|