கோடி ரூபாய் பெறுமதியான சிகரட் சிக்கியது !
Friday, February 1st, 2019
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சிகரட் தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
புறக்கோட்டை – மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் வைத்து கொள்கலன் பாரவூர்தியில் இருந்து குறித்த சிகரட் தொகை மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் சுமார் 4 லட்சம் சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கப்பலுக்கான உதிரிபாகங்களை கொண்டு வருவது போன்று இந்த சிகரட் தொகை டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
Related posts:
வலிகாமத்தில் புகையிலை அறுவடை மும்முரம்
நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை - வாகன சாரதிகளுக்கு ...
காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகர்வு - வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்...
|
|
|


