கோடாரிக்கல்லுக்குளம் உடைப்பு: 142 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!
Thursday, November 15th, 2018
ஒட்டுசுட்டான் கோடாரிக்கல்லுக்குளம் உடைப்பு எடுத்ததனால் 142 ஏக்கர் வரையான நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இந் நெற்செய்கையை பாதுகாக்கும் நோக்கோடு முல்லைத்தீவு இராணுவ தலைமையக பொறுப்பதிகாரி லெப்டினல் கேணல் துசியந்த இராஜகுருவின் ஏற்பாட்டில் 100 இற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களைக் கொண்டு தற்காலிகமாக குளத்தின் நீரினை தடுப்பதற்கு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் பொதுமக்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் 142 ஏக்கர் நெற்செய்கையையும் ஓரளவு அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடும் விசமிகள் - மக்கள் குற்றச்சாட்...
ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி ஊருவாக்கம் – வெளியாகியன விசேட வர்...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...
|
|
|


