கொழும்பு – மதுரை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை தினசரி இயக்கவுள்ளதாகவும் இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – மதுரைக்கு இடையில் இயங்கிய மிஹின் லங்கா எயார்லைன்ஸ் விமான சேவை தனது சேவையை நிறுத்தவுள்ளது. இந்நிலையிலேயே, எதிர்வரும் 30ம் திகதி முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தினமும் மதுரையிலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 3.10க்கு வந்துசேரும். பின்னர் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான செயலமர்வு - கைத்தொழில் அபிவிருத்திச் சபை!
கிண்ணியா கோர விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
|
|