கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Sunday, October 18th, 2020

கொரோனா தொடர்பான தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் போன்று வைரசு தொற்றுக்குள்ளானால் அதனால் தமது குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக ஏனையோருக்கும் அது பரவுவதை தடுக்கும் முறை தொடர்பான ஆலோசனைகளை இந்த துரித தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

இதே போன்று சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளுடன் தமக்கு கொவிட் 19 வைரசு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தால் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்கும் தேவையான உதவியை பெற்றுக் கொள்வதற்கும் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகள் மூலம் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தமது ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த சேவையுடன் இணைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த 1999 துரித தொலைபேசி இலக்கத்துடன் எத்தகைய தொலைபேசி வலைப்பின்னல் ஊடாகவும் 24 மணித்தியாலங்களிலும் தொடர்பு கொள்வதற்கு பொது மக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: