கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் மீது தாக்குதல்

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவர் மீது வரணி யாக்கரை வீதியில் புதன்கிழமை(26) இரவு-07.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கடமையை முடித்த பின்னர் வடமராட்சியிலுள்ள தனது வீட்டுக்கு வறணி யாக்கரை வீதி வழியாக மோட்டார்ச்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தரை வழிமறித்த இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த குழுவினரிடம் தப்பித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார்ச் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து தக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குச் சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் கைவிடப்பட்ட உத்தியோகத்தரின் மோட்டார்ச் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
கடலாமை இறைச்சி , முட்டைகளை வைத்திருந்த ஐவர் கைது!
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!
நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று - குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என ப...
|
|