கொக்குவிலில் துப்பாக்கி சூடு?
 Friday, October 7th, 2016
        
                    Friday, October 7th, 2016
            
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப்பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்று அதிகாலையில் முச்சக்கர வண்டியில் வந்தோரால் கைத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் உள்ள வீட்டில் அதிகாலையில் உறக்கத்தில் இருந்த வேளையில் திடீரெனக் கேட்ட சத்திதனை அடுத்து வீட்டார் எழுந்து பார்த்தபோது ஓர் முச்சக்கரவண்டி செல்வதனை அவதானித்துள்ளனர்.அதிகாலையில் எழுந்து பார்த்தவேளையில் வீட்டின் முன்னால் துப்பாக்கி ரவை காணப்பட்டதுடன் வீட்டின் சுவரில் துப்பாக்கிச் சன்னம் துளைத்த அடையாளமும் கானப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்திற்குச் சென்ற பொலிசார் துப்பாக்கி ரவைகளை மீட்டதோடு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        