கைவிடப்படுகின்றது பொருத்து வீட்டுத் திட்டம்?

Sunday, June 19th, 2016
லட்சுமி மிட்டல் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவிருந்த பொருத்துவீட்டுத் திட்டத்தினைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு வருகைதந்திருந்த உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் – குறித்த வீட்டுத்திட்டத்திற்குப் பதிலாக வடக்கு மாகாணத்தின் சூழலுக்கேற்றவகையில் மாற்றுத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தத் திட்டம் தொடர்பாக எதிர்காலத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts:


ரஷ்ய விமான விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...
ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை - மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
வெளிநாட்டு வேலை வாய்ப்பு - சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம...