கையடக்கத்தொலைபேசியால் பலியான உயிர்!

Friday, May 13th, 2016
கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது –

பாடசாலை மாணவன் ஒருவன் கட்டிலில் இருந்தவாறே தனது கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரெனெ மின்னல் தாக்கியதையடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான்.

இச்சம்பவம் குறித்து அவரது சகோதரி கூறுகையில்,

தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான், யார் சொன்னாலும் கேட்பதில்லை. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து, தந்தை கையடக்கத்தொலைபேசியொன்றை அவனுக்கு பரிசளித்தார்.

மழைகாலங்களிலும் அவன் அதை பயன்படுத்திய வண்ணமே இருப்பான்.

குறித்த சம்பவதினத்தன்றும் அதேபோல் கட்டிலில் இருந்தவாறே விளையாடிக்கொண்டிருந்தான் அப்போது இடி முழங்கும் சத்தம் கேட்டது. அதையடுத்து, அக்கா என்று என்னை அழைக்கும் சத்தமும் கேட்டது விரைந்துசென்று பார்த்தேன்.

அவன் கட்டிலிருந்து சில அடிகள் முன்னோக்கி கீழே விழுந்திருந்தான்.

நான் என்னவென்று விசாரித்த போது பதில் வராததால் தொட்டுப்பார்த்தேன், கைகள் உறைந்து போய்க் காணப்பட்டன.அத்துடன் பயத்து போய் நான் அனைவரையும் சத்தம் இட்டு அழைத்து தம்பியை அவசரமாக வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றேன் என அவர் தெரிவித்தார்.

Related posts: