கைத்தொலைப்பேசியை அடிப்படையாக கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி நிதி மோசடி – பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Tuesday, May 12th, 2020

கையடக்கதொலைப்பேசியை அடிப்படையாக கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து சிலருக்கு தொலைப்பேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக 25 ஆயிரம் ரூபாவினை தொலைப்பேசி எண்மான நிதிபரிமாற்ற முறையின் ஊடாக வைப்புச்செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது காவற்துறையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான தொலைப்பேசி அழைப்புக்கள் வரும்போது பொதுமக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அல்லது 119 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: