கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – நீரியல் வள அமைச்சு!
Saturday, April 8th, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மீன்பிடி கண்காணிப்பு கட்டமைப்பில் உள்ள தகவல்களுக்கு அமைய, குறித்த படகு இந்திய எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது என, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, மேற்கண்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையை இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், மீனவர்களை விடுதலை செய்யுமாறு தற்போது இந்திய அதிகாரிகளிடம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
Related posts:
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எ...
தமிழரின் மனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிகொள்வார் - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.ப...
தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்...
|
|
|


