குழு மோதலில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது!

Tuesday, February 28th, 2017

யாழ். பிரதான வீதியில் குழு மோதலில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) பிற்பகல் யாழ். பிரதான வீதி மடத்தடிச் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் மூண்டது.

இதனையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து இது தொடர்பில்  பொலிஸாருக்குத்  தகவல் வழங்கப்பட்டது. இதன் போது முச்சக்கரவண்டியொன்று அடித்து நொருக்கப்பட்டது.  கூரிய ஆயுதங்களுடன் இளைஞர்கள் அப்பிரதேசத்தில் நடமாடியதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. எனினும், பொலிஸார் அங்கு வருகை தருவதற்கிடையில் குறித்த இளைஞர் குழு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

மேற்படி இளைஞர் கோஷ்டியைத் தேடிப் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்றிரவு நான்கு பேர் யாழ்.பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும் கைதுசெய்யப்படுவர் என யாழ்ப்பாணம்  பொலிஸார்  தெரிவித்தனர்.

arrest_07-1

Related posts:


உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!
மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்...
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாளை மீண்டும் ஆராயப்படும் -...