குழந்தை பருவம் தொடர்பிலான கணக்கெடுப்பு!

Wednesday, June 22nd, 2016

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட உள்ள இக்கணக்கெடுப்பினை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் இம்மாதம் 22,23,24 மற்றும் 27 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகாரிகளை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தலாஹேன சமூக மையத்தில் இப்பயிற்சி நெறியை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தை பருவத்தில் அபிவிருத்தியினை மேற்கொண்டு குழந்தைகளின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் இச்செயற்றிட்டத்தின் மூலம் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை ஒழிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் ஆரம்ப நிலை பாடசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், ஆரம்ப நிலை ஆசிரியர்களின் தரத்தினை வளர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களின் வழிகாட்டலின் பெயரில் உலக வங்கியின் திட்ட இயக்குனர் டாக்டர் ரவி நாணாயக்கார அவர்கள் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Related posts: