குழந்தையின் ஆடைக்குள் ஹெரோயின்: குடும்பஸ்தர் கைது!
 Tuesday, January 8th, 2019
        
                    Tuesday, January 8th, 2019
            
குழந்தையின் ஆடைக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 27 வயது குடும்பத்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியாவில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கிராம் ஹெரோயினை கொள்வனவு செய்து கொண்டு தனது மனைவி, பிள்ளையுடன் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையத்திலிருந்து அரியாலை பூம்புகாரிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நபரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது குழந்தையின் ஆடையினுள் 15 கிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். உடனடியாக ஹெரோயினை மீட்டதுடன் குறித்த நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        