குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்து!
Monday, January 23rd, 2017
கிளிநொச்சி, அக்ராயன் குளத்து நீரை விவசாயிகள், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயத் திணைக்களமும், இந்தக் குளத்தின் கீழான விவசாய அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளன.
அக்ராயன் குளத்தின் கீழ் சுமார் 4,500 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுக்கு குளத்தில் இருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலம் நீவில் பகுதியில் உள்ள 1,200 ஏக்கர் வயல்களுக்கும் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. இரணைமடுக் குளத்தின் கீழான பெரும் போகச் செய்கை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நீர்பாசனக் குளங்களில் இருந்து மிகுந்த திட்டமிடல்களுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் நீர் விநியோகம் மேற்கொண்டுள்ளது.

Related posts:
நெடுந்தீவில் 6 இந்தியர்கள் கைது!
8 ரிச்டர் அளவில் அடுத்த வாரம் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் - கொழும்பு நகர் பாதிக்கும் வாய்ப்பும் அதிக...
ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி - உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்...
|
|
|


