அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என குற்றச்சாட்டு!

Thursday, June 1st, 2017

அனர்த்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன் ஆயத்தங்களுடன் இருக்கவில்லை எனவும் அதனால் பாரியளவில் உயிர், உடமைச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் கூறியுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சில ஆண்டுகளாகவே இலங்கையில் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தற்போது அது வருடாந்த நிகழ்வாக மாற்றமடைந்துள்ளது. அனர்த்தம் ஏற்படும் போது அதற்கு உதவிகளையும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டினை போலவே இந்த ஆண்டிலும் அனர்த்த நிலைமையை காண முடிந்தது.அனர்த்த முகாமைத்துவம் உரிய முறையில் திட்டமிடப்படாமை ஓர் துரதிஸ்டவசமான சம்பவமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய அனர்த்தங்களின் போது தேயிலை, சீனி மற்றும் அரிசியை சேகரிப்பதில் பயனில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதைய நிலைமைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்றும் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Related posts:

கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் - நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர...
எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் - உ...
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...