குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவிப்பு!
Sunday, June 20th, 2021
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 13 பேர் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 11 பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட ரோந்து படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு!
விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ...
|
|
|


