குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கு மூன்று மாத காலம் சிறைத்தண்டனை!
Tuesday, September 27th, 2016
யாழ். குருநகர்ப் பகுதியில் 300 கிராம் கஞ்சாப் பொதியுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கு மூன்று மாத காலம் சிறைத்தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(27) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் யாழ். குருநகர்ப் பகுதியில் 300 கிராம் கஞ்சாப் பொதியுடன் யாழ். பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனை வழங்கி யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

Related posts:
சுகாதார எச்சரிக்கை இல்லாத சிகரெட்டினை விற்பனை செய்த வர்த்தகர்கள் இருவருக்குத் தண்டம்!
வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
வாகனங்களின் விலை குறைந்துள்ளது - இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!
|
|
|


