குடிநீர் போத்தல் தொடர்பில் புதிய சட்டம்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் போத்தல் தயாரித்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது
இது தொடர்பில், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் தினத்திலிருந்து யாரேனும் அதனை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
குழந்தை பிறந்து 6 நாட்களில் இளம்தாய் ஒருவர் மரணம்
வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை !
|
|