குடிநீருக்காக வீதியில் நிற்கும் அவலம்

Wednesday, April 20th, 2016

லிந்துலை – நாகசேனை பேரம் தோட்டத்தில் 185 குடும்பங்கள் சேர்ந்த 575 இற்கு மேற்பட்ட பொதுமக்கள்  வாழ்ந்து வருகின்றனர்.

இம்மக்களின் நலன் கருதி 10 லட்சம் ரூபா செலவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பன்முகப்படுத்தபட்ட நிதியின் மூலம் 05 வருடங்களுக்கு முன் மக்களின் பாவனைக்காக குடி நீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஒரு குழாயில் வரும் நீர்க்காக பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடியிருப்பு பகுதிகளுக்கு பொருத்தப்பட்ட நீர் குழாய்கள் உடைந்து பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் ஓரே குழாயில் மாத்திரம் நீர் வருகின்றது.

இதன் காரணமாக இம்மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீரை பெற்றுகொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர் நோக்குவதுடன் நேரத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லமுடியாமலும் தொழிலுக்கு செல்பவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக இத்தோட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

7dfc54b7-439c-4a57-b895-e3bc3691b478

Related posts: