குடா நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Thursday, September 14th, 2017

குடநாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இங்கு பயிரிடப்படும் வெங்காயம் அதிகளவில் தென்பகுதிக்குஎடுத்துச் செல்லப்படுவதே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குடா நாட்டில் இந்த முறை கூடுதலான விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டனர் என்று விவசாயத் தினைக்களம் தெரிவித்தது. சின்ன வெங்காயம் விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் செய்கையர்கள் கூடுதலாக உண்மை விதை வெங்காயம் மூலம் நாற்று மேடை அமைத்து செய்கையில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் காலநிலைக்கு ஏற்றவாறு விவசாயிகள் அதிக விளைச்சலையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் குடாநாட்டில் பயிரிடப்பட் வெங்காயம் கூடுதலாக தென்பகுதிக்கு எடுத்து செல்லப்படுவதால் இங்கு வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

திருநெல் வேளி ,சுன்னாகம் , மருதனாமடம், சந்தைகளில்  சின்னவெங்காயம் ஒருகிலோ 230ரூபாலைத் தாண்டியுள்ளார். இந்த விலை அடுத்து வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: