குடாநாட்டு வியாபாரிகளுக்கு அரிசிக்கான நிர்ணய விலை : மீறினால் சட்டநடவடிக்கை!

Saturday, February 11th, 2017

நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் சங்கம் விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் அடிப்படையில் அரிசி விற்பனை தொட ர்பில் கட்டுப்பாட்டு விலைகள் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சம்பா மற்றும் சுதுரு சம்பா, தவிர்ந்த சம்பா வகை அரிசி 80 ரூபா, நாட்டு அரிசி 72 ரூபாவும், பச்சை அரிசி 70 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு குறித்த கட்டுப்பாட்டு விலை கடந்த புதன்கிழமை வரை நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆதலால் யாழ். மொத்த , சில்லறை வியாபாரிகள் அனைவரும் இந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும்படியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil-Daily-News-Paper_27368891240

Related posts: