குடாநாட்டில் 989 குடும்பங்களுக்கு வீடமைப்பு கடன்கள்!

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 989 குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
70 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பதற்கான கடன்களும் 919 குடும்பங்களுக்கு வீடுகளின் பகுதிகளை நிறைவு செய்வதற்கான கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. 10வருட காலப்பகுதியில் 03.7வீத வட்டியுடன் மாதாந்தம் திருப்பிச் செலுத்தக் கூடியதாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்.மாவட்ட தெசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வீடமைப்புக்கடன் வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்புக் கடன் பெற விரும்புபவர்கள் பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பிரதேச செயலகப் பிரிவு நிலையில் நெடுந்தீவுப் பிரிவில் ஒருவருக்கும் வேலணைப் பிரிவில் 15பேருக்கும், ஊர்காவற்றுறைப் பிரிவில் 16 பேருக்கும், யாழ்ப்பாண பிரிவில் 50பேருக்கும், நல்லூர் பிரிவில் 7பேருக்கும், சண்டிலிப்பாய் பிரிவில் 84பேருக்கும், சங்கானைப் பிரிவில் 144பேருக்கும், சாவகச்சேரிப் பிரிவில் 190பேருக்கும்ஈ கரவெட்டிப்பிரிவில் 72பேருக்கும், பருத்தித்துறைப்பிரிவில் 63பேருக்கும், மருதங்கேணிப் பிரிவில் 87பேருக்கும், காரைநகர்ப் பிரிவில் 33பேருக்கும் வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன – என்றார்.
Related posts:
|
|