குடாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகளுக்கு அதியுட்ச நஷ்டஈடு?  – அரச அதிபர் வேதநாயகம்!

Wednesday, September 7th, 2016

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு படையினர் தமது வசம் வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை சட்டபூர்வமாக சுவீகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால் குறித்த காணிகளுக்கு அதியுட்ச நஷ்டஈடுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்

குடாநாட்டில் படையினர் வசம் உள்ள காணிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கப்படுவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் விடுத்துள்ளார். பலாலி படைத்தளத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு படையினர் வசம் உள்ள பொதுமக்களின்காணிகள் தொடர்ந்தும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அந்த காணிகளை சட்டபூர்வமாக சுவீகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த காணிகளுக்கு அதியுட்ச நட்டஈடுகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகயாழ்ப்பாண அரசாங்கம் அதிபர் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

vethanayakan-720x4801-720x480

Related posts: