குடாநாட்டில் இம்முறை மிளகாய் நல்ல விளைச்சல் – விவசாயப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, February 18th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிளகாய் பயிர்ச்செய்கை 303 ஹெக்ரேயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருமளவில் எம்.ஜ.கிறீன் ரகமும் அடுத்து எம்.ஜ.2 ரகமும் பயிரிடப்பட்டுள்ளது.

மிளகாய்ப் பயிர்கள் குறிப்பிடத்தக்க நோய்த்தாக்கம் இன்றி நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது என யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்கள் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்.மாவட்ட விவசாயிகள் உப உணவு பயிர்ச்செய்கையில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு மானிய உதவிகள், மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்குவதும் மேலதிக ஆர்வ நிலைக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது. மிளகாய் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காய் மிளகாய் விலை கணிசமான அளவு குறையாமல் இருப்பதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய் மிளகாய் பெருமளவில் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அத்துடன் செத்தல் மிளகாயின் விலையும் கிலோ ஒன்றுக்கு 300ரூபாவுக்கு குறையாது விற்பனையாகின்றது, எம்.ஜ.கிறீன் ரக மிளகாய்ப் பயிர்கள் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகாமல் நல்ல விளைச்சல் கொடுப்பதோடு அறுவடை செய்வதற்கும் இலகுவானதாக இருப்பதால் அறுவடை தொடர்பாக செலவும் குறைவாக உள்ளது பாவனையாளர்களும் கவர்ச்சிகரமான நிலையில் கொள்வனவு செய்து பயன்படுத்துகின்றனர். இந்த வருடம் 330ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மிளகாய்ப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இது எதிர்காலத்திலும் மேலும் அதிகரிக்கும் என்றார்.

8

Related posts: