கீதாவுக்கு வழங்கிய வரிசலுகையை உடனடியாக மீள அறவிட வேண்டும் – கபே அமைப்பு !

Saturday, May 6th, 2017

மேன்முறையீட்டு நீதிமன்றம் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனக் கூறி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்துள்ளது இதனால் அவருக்கு வரிச்சலுகையில் வழங்கப்பட்ட வாகனத்திற்கான வரியை உடனடியாக அறவிடுமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கபே அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு அரசு வரிச்சலுகையில் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காமல் போயுள்ளது என்று கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் எப்படியாவது கீதா குமாரசிங்கவிடம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரியை அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது

Related posts:

சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் 
இராசவீதியோரம் குவிக்கப்பட்டுள்ள கற்களால் பயணிகளுக்கு இடையூறு - விபத்துக்களைத் தடுக்க உடன் நடவடிக்கை ...
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...