கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – பிரதமர்

யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. அதனால், இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக எமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் புதிய கட்டடம் இன்று பிரதமர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து திட்டமொன்றை வகுத்துள்ளோம். இந்தத் திட்டம் நிறைவடைந்தால், அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் படிப்படியாக முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்
Related posts:
வயாவிளானில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!
கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!
செனல் 4 காணொளி விவகாரம் - பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் முறைப்பாடு - இராஜாங்க அமைச்சர் சிவநே...
|
|