கிளிநொச்சியில் தென்னைப் பயிர்சசெய்கை!

Wednesday, September 13th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் தெங்கு அபிவிருத்திக்காக 38.6 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக குறித்த பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்தத்தில்  அழிவடைந்த  பிரதேசங்களிலும்  ஏனைய பிரதேசங்களிலும் தெங்குப்பயிர்ச் செய்கையை மேம்படுத்தும் வகையில் தென்னை  அபிவிருத்தி சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டத்திற்காக 38.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 23.30 மில்லியன்ரூபா நிதி செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தெங்கு அபிவிருத்திக்காக மானியமுறையில் தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு 4.98 மில்லியன் ரூபாவும் புனர்நிர்மான முறையில்தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு 0.82 மில்லியன் ரூபாவும் தரம் 5 பாடசாலைமாணவர்களுக்கு தென்னங்கன்றை வழங்குவதற்கு 0.69 மில்லியனும்இ பிறக்கின்ற குழந்தைகளுக்குதென்னங்கன்றுகளை வழங்குவதற்கு 0.07 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டுத்தோட்டப்பயிர்ச் செய்கைக்கு தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு 1.166 மில்லியன் ரூபாவும் மானியமுறையில் மாட்டுத்தொழுவம் அமைக்கின்ற திட்டத்திற்கு 0.28 மில்லியன் ரூபாவும் கற்பகத்தெரு கடன் வழங்கல்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  22.13 மில்லியன் ரூபாவும் கால் ஏக்கர் வீட்டுத்திட்டச்செய்கைக்கு 0.64 மில்லியனும்இமானிய நீர்ப்பாசன முறைக்காக 0.648 மில்லியன் ரூபாவும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்சித்திட்டத்தின் கீழ் மாதிரிதோட்டம் அமைத்தல் 0.6 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும்இதென்னங்கன்றுகளுக்கான டொலமைற் பாவனைக்காக 0.4125 மில்லியன் ரூபாவும் தென்னை ஊடுபயிர்ச்செய்கைக்காக 0.39 மில்லியனும் மண் ஈரப்பதன் பாதுகாப்பதற்காக 0.18 மில்லியனும் தென்னை உரிமட்டைப்பாதுகாப்புப் பாவனைக்காக 0.555 மில்லியன் ரூபாவும் சேதனப்பசளைப்பாவனைக்காக 2.1 மில்லியன் ரூபாவும் அசேதனப்பசளைப் பாவனைக்காக 2.408 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக இதில் கடந்த மாதம்20 ஆம் திகதி வரைக்கும் 23.30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts: