கிளிநொச்சியில் சமூக வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்
Wednesday, April 6th, 2016
கிளிநொச்சிக்கு சமூக வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் கிளிநொச்சியில் நேற்றுசெவ்வாய் கிழமை சமூக வன்முறைகள் மற்றும் அநிதீகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை எட்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்தது.
கிளிநொச்சி நகர ரோட்டரிக் கழகம் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பெண்களுக்கு எதிராக வன்முறைகளை நிறுத்து, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, முதியவர்களை புறக்கணிப்பதை நிறுத்து, மாற்று வலுவுள்ளோரை புறக்கணிப்பதை நிறுத்து, அதீத மது,போதை பொருள் பாவனை, புகைப் பயன்பாடு போன்றவற்றை நிறுத்து, பாலியல் வன்முறைகளை நிறுத்து, போன்ற விடயங்களை முன்வைத்து இவ் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சூழலில் மேற்படி சமூக வன்முறைகள், பாலியல் வன்புனர்வுகள், உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் அது தொடர்பில் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் கிராமங்கள் மட்டத்தில் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கிலும் அதன் முதல் கட்டமாக இவ்விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கிளிநொச்சி நரக ரோட்டரிக் கழகம் மற்றும் அவுஸ்ரேலிய ரோட்டரிக் கழகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், ஆகியோருடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பொது அமைப்புகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts:
|
|
|


